Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் கீழ் ரூ.37 கோடியில் 4 வழிச்சாலை பணிகள் எம்.எல்.ஏ., பிரபாகரன் தொடங்கி வைத்தார்!

பெரம்பலூர், பிப்.26: பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதல்வரின் சாலை கள் மேம்பாட்டுத் திட்டத் தின் கீழ், ரூ.23 கோடி மதிப் பீட்டில் பெரம்பலூர் புற வழிச்சாலை மற்றும் ரூ.14 கோடி மதிப்பீட்டில் ஆத்தூர் – பெரம்பலூர் சாலை ஆகிய சாலைகளில் மையத்த டுப்பான் அமைத்தல் மற்றும் இருபுறமும் தார்சாலை அகலப்படுத்தும் பணிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன் தலைமையில் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கிராமங்களின் வளர்ச்சிக் காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், சட்டமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், கலைஞரின் கனவு இல்லம், நமக்கு நாமே திட் டம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், பள்ளிகள் உட் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களின் தேவைகள் நிறைவேற்றி வருகிறார்கள். மேலும் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்ட நெடுஞ் சாலைத் துறை சார்பில், முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.23 கோடி மதிப்பில் பெரம்பலூர் புறவழிச் சாலையில் 3.875 கி.மீ.தொலைவிற்கும், ரூ.14 கோடி மதிப்பீட்டில் ஆத்தூர் – பெரம்பலூர் சாலையில் 2.200 கி.மீ தொலைவிற்கும் இரு வழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்துதல், வலுப் படுத்துதல், பாக்ஸ் கல் வெர்ட் அகலப்படுத்துதல், தடுப்புச் சுவர் கட்டுதல், சாலை சந்திப்பு மேம்படுத் துதல் மற்றும் மையப் பாது காப்புச் சுவர் கட்டுதல் ஆகிய பணிகள் மேற் கொள்ளப்படவுள்ளது.

இதன் மூலம் போக்கு வரத்து நெரிசல் இன்றி பேருந்துகள் கனரக வாக னங்கள் எளிதாக சென்று வரும் வகையிலும், வாகன ஓட்டிகள் தங்கள் பயணங் களை மேற்கொள்ளவும் பெரிதும் வசதியாக இருக்கும்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட தலைவர் வீ.ஜெக தீசன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் கலைவாணி, நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந் திரன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியா ளர் தமிழ் அமுதன், உதவி பொறியாளர்கள் ராஜா, விக் னேஷ், நகர்மன்ற துணைத் தலைவர் ஆதவன், பெரம் பலூர் வட்டாட்சியர் பால சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.