Sunday, 18 October 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

4 நாட்கள் தொடர் விடுமுறை!.. விமானக் கட்டணம் அதிரடி உயர்வு!...

பொதுவாகவே தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை போன்ற பண்டிகை நாட்களில் தொடர் விடுமுறைகள் கிடைத்தால் சென்னையில் இருந்து பலரும் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள். அவர்களில் பலரும் ரயில், அரசு பேருந்து மற்றும் ஆம்னி பேருந்துகளை தேர்ந்தெடுப்பார்கள்.பண வசதி படைத்தவர்கள் விமான சேவையை தேர்ந்தெடுப்பார்கள். சென்னையிலிருந்து திருச்சி, தூத்துக்குடி, மதுரை, சேலம், கோவை போன்ற மாவட்டங்களுக்கு விமானங்கள் செல்கிறது.

அதேநேரம் தொடர் விடுமுறையை பயன்படுத்தி விமான சேவையை அளிக்கும் நிறுவனங்கள் அந்த நாட்களில் விமான கட்டங்களை மிகவும் அதிக அளவு உயர்த்தி விடுகின்றன..


சனி, ஞாயிறு வார விடுமுறை மற்றும் திங்கள், செவ்வாய் ஆயுத பூஜை விடுமுறை என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வந்திருப்பதால் சென்னையிலிருந்து செல்லும் விமானங்களின் கட்டணங்கள் அதிக அளவு உயர்ந்துள்ளது.


சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்ல சாதாரண நாளில் கட்டணம் ரூ.7201ஆக இருந்த நிலையில் நேற்று 17,363 ஆக உயர்த்தப்பட்டது.அதேபோல் சென்னையிலிருந்து மதுரைக்கு சாதாரண நாளில் ரூ.5459ஆக இருந்த கட்டணம் நேற்று ரூ.8537ஆக உயர்ந்தது.சென்னையிலிருந்து திருச்சிக்கு சாதாரண நாளில் ரூ.5066ஆக இருந்த கட்டணம் நேற்று ரூ.9896 ஆக உயர்ந்தது. அதேபோல் சென்னையிலிருந்து கோவைக்கு சாதாரண நாளில் ரூ.5373ஆக இருந்த விமான கட்டணம் நேற்று ரூ.16,601 ஆக உயர்ந்தது.