Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

மணி நகரில் திருச்செந்தூர் மாசி திருநாளை முன்னிட்டு நடைபயண பக்தர்களுக்கு அன்னதானம்

பொள்ளாச்சி தொழிலதிபர் பாபு, வீரபாகு வழங்கினர்.

திருச்செந்தூர்: மணி நகரில் திருச்செந்தூர் மாசி திருநாள் ஐந்தாம் நாளை முன்னிட்டு மணிநகர் மெயின் ரோட்டில் கன்னியாகுமரி அஞ்சு கிராமம் திசையன்விளை போன்ற ஊர்களில் இருந்து நடை பயணமாக நடந்து வரும் முருக பக்தர்களுக்கு மணி நகரில் பொள்ளாச்சி தொழிலதிபர் பாபு வீரபாகு ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் 6000 பக்தர்களுக்கு மேல் சப்பாத்தி, பிரியாணி, கேசரி ஆகியவைகள் இரவு உணவாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் குலசேகரன்பட்டினம் நூலகத்தின் நல்நூலகர் நூலக செம்மல் மாதவன், கொம்மடிக்கோட்டை நூலகர் சிவனைந்தபெருமாள் மற்றும் திமுக சேர்ந்த பசுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி தொழிலதிபர் பாபு அவருடைய தம்பி வீரபாகும் சிறப்பாக செய்திருந்தனர்.