தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில், நடிகர் விஜய்யின் தவெகவுடன் இணைந்து செயல்பட காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மார்ச் முதல் வாரத்தில் இதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடலாம் என கூறப்படுகிறது.
விஜய், காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு வழங்கவும் 5 முதல் 6 அமைச்சரவை பதவிகள் அளிக்கவும் தயாராக இருப்பதாகவும், 100 தொகுதிகள் வரை வழங்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தி மார்ச் 5ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் கிராமக் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது ராகுல் - விஜய் சந்திப்பு நடக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
என்றாலும், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறும் நிலைப்பாட்டில் கட்சி உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.