Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பினை எம்.எல்.ஏ., ம.பிரபாகரன் நடத்தி வைத்தார்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க எம்.எல்.ஏ. பிரபாகரன் கோரிக்கை

பெரம்பலூர், பிப்.26: பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட் டத்தின் கீழ், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமு தாய வளைகாப்பினை மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன் தலைமையில், பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் பெரம்பலூர் முத்துகிருஷ்ணா திரு மண மண்டபத்தில் நடத்தி வைத்து வாழ்த்தினார்.

பெரம்பலூர் மாவட்டம், பெரம் பலூர் சட்டமன்ற தொகுதிக் குட்டபட்ட பெரம்பலூர் வேப்பந் தட்டை மற்றும் ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா பெரம்பலூர் முத்துகிருஷ்ணா திருமண மண்ட பத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் பெண்க ளின் வாழ்வாதாரம் முன்னேற்ற மடைய மகளிர் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிட்டம் என எண்ணி லடங்கா திட்டங்களை செயல் படுத்தி வருகின்றார்கள்.

மாணவர்கள் காலையில் பசி யோடு சென்று கல்வி கற்க முடியாது என்பதை உணர்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காலை உணவு திட்டத்தை செயல் படுத்தி வருகின்றார்கள். இத்திட் டத்தின் சிறப்பை உணர்ந்து, லண்டன் மாகாணத்தில் காலை உணவு திட்டம் தற்போது ஆரம் பிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த திட்டங்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் செயல்படுத்தி வந்த காலம் மாறி தற்போது பல்வேறு உலக நாடுகளிலும் செயல்படுத்தப் படு கிறது என்பது மிகவும் பெருமைக் குரிய செய்தியாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர், மகளிர் மாதந்தோறும் தங்களுடைய குடும்ப செலவிற்கு தங்களுடைய கணவ ரையும், தங்களுடைய பெற்றோரை யும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை செயல்படுத்திவருகின்றார்கள். இத்திட்டத்தை அறிவித்த போது இதற்கு உதவித்தொகை என்று நான் பெயர் வைக்கவில்லை மாறாக உரிமைத் தொகை என்றே பெயர் வைத்துள்ளேன் என கூறினார்கள்.

அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5000 அனைவரின் வங்கிக்கணக் கிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான தொகை யாக ரூ.3,000 ம், கோடைகால செல வினத் தொகையாக ரூ.2,000 ம் என மொத்தம் 5,000 வழங்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு அண்ணனாக, அப்பாவாக, உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகின்றார்கள். மகளிர் முன் னேற்றத்திற்காகவும், பொருளாதார ரீதியாக அவர்களை முன்னேற்று வதற்காகவும் திட்டங்களை செயல் படுத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

கர்ப்பிணி தாய்மார்கள் அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு, தங்களது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து, சிறந்த கல்வியினை வழங்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து, 250 கர்ப்பிணி பெண்களுக்கும் சீர்வரிசை பொருட் களை வழங்கிய பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், கர்ப்பிணி பெண்களுக்காக தயார் செய்யப்பட்டிருந்த அறுசுவை உண வினை அவர்களுக்குப் பரிமாறி, கர்ப்பிணி பெண்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

இந்நிகழ்ச்சிகளில், அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா இராஜேந்திரன், நகர்மன்ற துணைத் தலைவர் ஆதவன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலு வலர் இரா.ஜெயஸ்ரீ, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட வட்டார அலுவலர்கள் பிரேம ஜெயம் (பெரம்பலூர்), பென்னம்மா ,(ஆலத்தூர்), பூமா (வேப்பூர்) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.