Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த கும்கி யானைகள் சாடிவயல் முகாமிற்கு இடமாற்றம்

கோவை: கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கும்கி யானைகளால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் சிறுவாணி அருகே உள்ள சாடிவயல் யானைகள் முகாம், வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால், அவ்வப்போது ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த கும்கி யானைகள் அங்கு பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து முத்து மற்றும் காவேரி ஆகிய இரண்டு கும்கி யானைகள் தற்போது சாடிவயல் முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே சாடிவயலில் இருந்த சில யானைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், முத்து மற்றும் காவேரியின் வருகை வனத்துறையினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த யானைகள் வரவால் கோவை வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் யானை-மனித மோதல்கள் குறையும் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்..