பெரம்பலூரில் மின் பகிர்மான வட்டம் சார்பில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (JAC) சார்பாக பணி தொகுதி முதல்நிலை & இரண்டாம் நிலைபொறியாளர் மற்றும் அலுவலர்களுக்கு 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு முன்மொழிவில் சேர்த்துதிட கோரி ஆர்ப்பாட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பொறியாளர் கழக கிளை செயலாளர் பொறியாளர் பொன்சங்கர் , பொருளாளர் கார்திகேயன்ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மாநில செயலாளர் தோழர் S.அகஸ்டின் விளக்கவுரை ஆற்றினார்.
தமிழ்நாடு மின் வாரிய எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்பிளாய்ஸ் பெடரேஷன் சங்கத்தின்சார்பாக கணி , காளிதாஸ் /
பொறியாளர் அமைப்பு மாவட்ட பொறுப்பாளர் பொறியாளர்: கெளதமன், ஒர்க்கர்ஸ் சம்மேளனம் சார்பில் தோழர்.சிவக்குமார் தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பாக, நீலமேகம், ராமசாமி பொறியாளர் சங்கம் சார்பில் ருத்ராபதி, சந்திரசேகரன், மற்றும்CITU சார்பாக இளங்கோவன், தினேஷ் பன்னீர்செல்வம், அருள் ஜோதி, கணிமொழி அனைத்து சங்க நிர்வாகிகள், பொறியாளர்கள் அலுவலர்கள், தொழிலாளர்கள் என திரளாக பங்கேற்றனர்.