மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை!
மார்ச்-01, அன்று, கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கழகக் கொடியேற்றி, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி,கழக அரசின் ஐந்தாண்டு சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்து கூற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை வருமாறு, மேனாள் ஒன்றிய அமைச்சர் - கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. வழிகாட்டுதல்படி, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, இந்தியாவில் உள்ள மற்ற மாநில முதலமைச்சர்கள் பாராட்டுகின்ற வகையிலும், தமிழ்நாட்டு பொதுமக்கள் போற்றுகின்ற வகையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா மார்ச் -01, அன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழாவை பெரம்பலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர் கழகச் செயலாளர்கள், முன்னாள் இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிளைக் கழக செயலாளகள்,வார்டு செயலாளர்கள் அனைத்து கிளைக் கழகங்கள் தோறும் கழகக் கொடியேற்றி, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, முதியவர்கள், ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவிகள் வழங்கிட வேண்டும் எனவும், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் வீடு,வீடாக சென்று கழக அரசின் ஐந்தாண்டு சாதனைகளையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்தும், வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும், மீண்டும் கழக அரசு ஆட்சிக்கு வருவதற்கு துணையாக இருக்க வேண்டும் எனவும் பெதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.