Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

எசனை ஊராட்சியிலுள்ள அனுக்கூர் சாலையில் மரகத பூஞ்சோலை பூங்கா திறப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் எசனை ஊராட்சியிலுள்ள அனுக்கூர் சாலையில் மரகத பூஞ்சோலை பூங்கா வனத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது, இன்றைய தினம் தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள மரகத பூஞ்சோலைகளை வனத்துறை அமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இந்நிகழ்வால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் மரகத பூஞ்சோலை பூங்காவில் விளையாண்டு மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் வேப்பந்தட்டை வனச்சரக அலுவலர் சுதாகர், ஒப்பந்ததாரர் வெங்கடாசலம், வனக்காவலர்கள். மனோகர்,பிரதீப் குமார் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.