Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 2024-25 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகைளை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சிறந்த முறையில் குழு கூட்டங்கள், நிர்வாக சுழற்சி முறை மற்றும் நிதி வரவு, செலவு மேற்கொள்ளும் தொழில் , தரம் மற்றும் தணிக்கை, வங்கி கடன், அடிப்படை பயிற்சி மற்றும் தொழில் பயிற்சி, விழிப்புணர்வு விவரங்கள், சமுதாய மேம்பாட்டு பணியில் ஈடுபட்ட விபரம், கிராம சபை பங்கேற்பு, மாற்று திறனாளி மற்றும் முதியோர் மேம்பாட்டில் பங்கு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் கிராமப்புற / நகர்புற பகுதிகளிலுள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளை மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

அதனடிப்படையில் சிறப்பாக செயல்பட்ட, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், டி.களத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1,00,000, பெரம்பலூர் (நகர்ப்புறம்) பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1,00,000, ஊரகம் பகுதியில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், கீழப்புலியூர் ஊராட்சி சாமந்தி பூ மகளிர் சுய உதவிக்குழு, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், அம்மாபாளையம் களஞ்சியம் மகளிர் சுய உதவிக்குழு, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஜெமீன் பேரையூர் கங்கை மகளிர் சுய உதவிக்குழு மற்றும் நகர்புற பகுதியில் பெரம்பலூர் நகராட்சி பகுதியில் உள்ள விண்மீன் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் குரும்பலூர் பேரூராட்சியில் உள்ள பாளையம் காமராஜர் மகளிர் சுய உதவிக்குழு ஆகிய 5 குழுக்களுக்கு தலா ரூ.25,000/- வீதம் ரூ.1,25,000 என மொத்தம் ரூ.3,25,000 பரிசுத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கோபலகிருஷ்ணன், உதவித்திட்ட அலுவலர் பெர்லினா, வட்டார பணியாளர்கள் , சமுதாய அமைப்பாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டர்.