Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

அரோகரா முழக்கத்தில் அதிர்ந்தது திருச்செந்தூர்கோலாகலமாக நடைபெற்ற மாசித்திருவிழா தேரோட்டம்!

திருச்செந்தூர் நகரமே பக்தி வெள்ளத்தில் மிதந்தது

திருச்செந்தூர் மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் மார்ச் 2-ம் தேதியான இன்று கோலாகலமாக நடைபெற்றது. காலை 7 மணி அளவில் விநாயகர் தனித்தேரிலும், குமரவிடங்கபெருமான் சுவாமி, வள்ளி தெய்வானை அம்பாள்களுடன் பெரிய தேரிலும், தெய்வானை அம்பாள் தனித்தேரிலும் எழுந்தருளினர். "முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா... வேலனுக்கு அரோகரா" என்ற கோஷங்கள் விண்ணதிர முழங்க, திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு வெளி வீதிகளிலும் பவனி வந்த சுவாமி மற்றும் அம்பாள்களை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், திருச்செந்தூர் நகரமே பக்தி வெள்ளத்தில் மிதந்தது.