பச்சாபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஜெ., பேரவை துணைச் செயலாளர் வி. பிரசாத் வழங்கிய போது எடுத்த படம். அருகில், முன்னாள் ஊராட்சி செயலாளர் ஜி.பி.பாபு, வார்டு செயலாளர் மயில்சாமி, பூத்செயலாளர் விக்னேஸ்வரன் மற்றும் பலர் உள்ளனர்.
கோவை: அ.தி.மு.க., சார்பில், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, பச்சாபாளையத்தில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டது. பச்சாபாளையம் அருகே 6வது வார்டுக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு, 6வது வார்டு கிளை செயலாளர் மயில்சாமி வரவேற் றார். முன்னாள் ஊராட்சி செயலாளர் ஜி. பி பாபு முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட ஜெ., பேரவை துணைச் செயலாளர் வி. பிரசாத் கலந்துகொண்டு பேசும்போது; தி.மு.க ஆட்சியில் மக்கள் பெரும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். வரும் தேர்த லில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர்.
ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. தொடர்ந்து கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், தொகுதியிலும் மக்கள் நலத் திட்டப் பணிகளை தங்கு தடையின்றி நிறைவேற்றிட அதிமுகவுக்கு வாக்களிக்க வேண் டும் என்றார். இதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், பூத் செயலாளர் விக்னேஷ்வரன், 6வது வார்டு செயலாளர் என்.மாரிமுத்து, பிரதீப், வேல்முருகன், செந்தில், வெள்ளிங்கிரி உள்பட ஏராளமான கட்சியினரும், 6வது வார்டைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.