Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

ஸ்ரீஅய்யனார் சுவாமி திருக்கோவில் ஸ்ரீஅய்யனார் டிரஸ்ட் ஸ்ரீமுத்துமாரியம்மாள் நித்ய அன்னதான சேவா சார்பில் ஸ்ரீஅய்யனார் சுவாமி ஆசியுடன் ஸ்ரீகோனியம்மன் தேர் திருவிழா மஹா அன்னதானம்

கோவை: கோவையின் காவல் தெய்வம் என கோவை மக்களால் அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன் ஹால் பகுதியில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டு மின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழி பட்டுவிட்டு செல்கின்றனர்.

இந்த ஆண்டிற்கான தேர்த் திருவிழா முகூர்த்த காலுடன் துவங்கிய விழா கொடியேற்றபட் டது.

தொடர்ந்து கோனியம்மன் நாள்தோறும் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்னவாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் பவனி வந்து அனைத்து பக்தர்களுக்கும் காட்சியளித்து அருள் பாலித் தார். இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கோனியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடை பெறுகிறது.

பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் எழுந்தருளிய தேர் ராஜவீதியில் தேர்திடலில் இருந்து புறப்பட்டு ஒப்பணக் கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் தேர் திடலை அடையும் காட்சியை நாைள காண பக்தர்கள் காத்திருக்கி றார்கள்.

இத்திருவிழாவின் போது ஸ்ரீஅய்யனார் சுவாமி திருக்கோவில் ஸ்ரீஅய்யனார் டிரஸ்ட் ஸ்ரீமுத்துமாரியம்மாள் நித்ய அன்னதான சேவா சார்பில் ஸ்ரீஅய்யனார் சுவாமி ஆசியுடன் ஸ்ரீஅய்யனார் ஆதீனம் குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஸ்ரீஸ்ரீனிவாச சுவாமிகள் திருக்கரங்களால் மஹா அன்னதானம் வழங்கி பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்க உள்ளார்கள். பக்தர் கள் அனைவரும் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஸ்ரீஸ்ரீனிவாசசுவாமிகளிடம் அருளை பெற்று செல்லுங்கள்.

போக்குவரத்து மாற்றம்

கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கோனி யம்மன் தேரோட்டத்தை முன்னிட்டு 04.03.2026 அன்று காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, உக்கடம் ஒப் பணக்கார வீதி, பேரூர் ரோடு, ராஜ வீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை. தெலுங்கு வீதி, செட்டி வீதி மற்றும் சலிவன் வீதி பகுதி களில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கோவை மாநகர், அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் தேர் திருவிழா 04.03.2026 ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் பாது காப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சூழ் நிலைக்கேற்றவாறு போக்கு வரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி பேரூரிலிருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழி யாக நகருக்குள் வரும் வாக னங்கள் தடை செய்யப்படுகின் றன. மாற்றாக பேரூரிலிருந்து வரும் வாகனங்கள், செல்வ புரம் மாநகராட்சி பள்ளி அருகில் வலதுபுறம் திரும்பி. அசோக் நகர் ரவுண்டானா பேரூர் பைபாஸ் ரோடு வழி யாக உக்கடம் வந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். பெரிய கடை வீதி NH ரோடு, வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் ராஜா தியேட்டர் வழியாக சென்று உக்கடம் ரவுண்டானாவில் வலது புறம் திரும்பி பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி மற்றும் சேத்துமாவாய்க்கால் செக் போஸ்ட் வழியாக சிவாலயா சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

மருதமலை ரோடு, தடாகம் சாலையிலிருந்து தெலுங்கு வீதி வழியாக ராஜ வீதிக்கு வரும் வாகனங்கள் தடை செய்யப்படுகின்றன. மாற்றாக, தடாகம் சாலை, காந்தி பார்க் பொன்னையராஜபுரம் சொக் கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு. செல்வ புரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக உக்கடம் சென்று செல்ல வேண்டிய இடங் களுக்கு செல்லலாம். உக்கடத்திலிருந்து ஒப்பணக் கார வீதி வழியாக தடாகம் ரோடு, மருதமலை ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாக னங்களும் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண் டானா, சேத்துமாவாய்க்கால் செக் போஸ்ட், சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி சாலை, சொக்கம்புதூர், பொன்னை யராஜபுரம் சென்று தடாகம் சாலையில் செல்லலாம்.

சுக்கிரவார்பேட்டை சாலையிலிருந்து தியாகி குமரன் வீதி வழியாக ராஜ வீதிக்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது. கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் 04.03.2026-ம் தேதி காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நகருக்குள் வர தடை செய்யப் படுகிறது. தேர் திருவிழா நடைபெறும் ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, K.G. வீதி ஆகிய சாலைகளில் 04.03.2026-ம் தேதி காலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.

கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவிற்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாக னத்தில் வரும் பக்தர்கள் ராஜ வீதி மாநகராட்சி வாகன நிறுத்துமிடம் மற்றும் கோனி யம்மன் கோவில் எதிர்புறம் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத் திக் கொள்ளலாம் என மாநகர போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.