Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட் சியர் அலுவலக கூட்டரங் கில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி களில் பொதுமக்கள் வழங் கிய கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடை பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொது மக்களிடமிருந்து பெறப் பட்ட மனுக்களுக்கு எடுக் கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களி டம் விரிவாக ஆய்வு மேற் கொண்டார்.

தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டு மனைப் பட்டா, விதவை உதவித் தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலை ஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி 526 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட வருவாய் அலு வலர் உள்ளிட்ட அலுவ லர்கள் பெற்றுக்கொண்ட னர்.

இக்கூட்டத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலர் வாசு தேவன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சி யர் சிவக்கொழுந்து, தாட்கோ பொது மேலாளர் கவியரசு, மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் சீனி வாசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.