Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

சட்ட மன்ற தேர்தல்; போலீசாருடன் இணைந்து பணியாற்ற வந்த எல்லை பாதுகாப்பு படையினருக்கு வரவேற்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பணிக்காக சிவ காந்த் பாத்தியா, Assistant Commandant தலைமையில் Border Security Force (BSF) எல்லையோர காவல் படை யினர் 1 அதிகாரி மற்றும் 35 காவல் பணியாளர்கள் பெரம் பலூர் மாவட்டத்திற்கு வந்தடைந்து அறிக்கை செய்தனர்.

மேற்படி எல்லையோர காவல் படையினரை பெரம் பலூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் G.S. அனிதா, இ.கா.ப., உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப் பாளர் கர்ணன் அவர்கள் வரவேற்றார். மேலும், தேர்தல் பாது காப்பு பணிக்காக வருகை தந்துள்ள எல்லையோர காவல் படையினர் பெரம் பலூர் ரோவர் கல்லூரி வளாகத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் காலத்தில் மாவட்டத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இவர்கள் மாவட்ட காவல் துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.