தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சியை யொட்டி, பூண்டு கண்காட்சி யும் நடத்தப்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவ னூர், பூண்டி, கவுஞ்சி, பூம் பாறை, கூக்கால், பழம் புத்தூர், கிளாவரை உள் ளிட்ட பகுதிகளில் 900 ஹெக்டேர் பரப்பளவில் மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த மலைப்பூண்டு பாரம்பரிய வகை மற்றும் அதிக மருத்துவத் தன்மை கொண்டது. அதனால் கொடைக்கானல் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.
பயிரிட்ட 120 நாட்களில் மலைப்பூண்டு அறுவடைக்கு வரும். கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் பூண்டு சாம்பல் நிறத்தில் காணப்படும். இதில் காரத்தன்மையும் அதிகம்.
புகை மூட்டம் செய்து பதப்படுத்தி வைத்தால் ஓராண்டு வரை கெடாமல் இருக்கும். கொடைக்கானல் மலைப்பூண்டு உட்பட நாடு முழுவதும் உள்ள பல வகை யான பூண்டு, பூண்டின் முக் கியத்துவம் குறித்து பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழகத்தில் முதன் முறையாக கொடைக் கானலில் கண்காட்சி மற்றும் பயிற்சிப் பட்டறை நடத்துவ தற்கு திட்டமிடப்பட்டுள் ளது.
பிரையன்ட் பூங்காவில் மே மாதம் 63-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெற உள்ளது. மலர் கண்காட்சியை பார்க்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடு களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவர்.
அந்த சமயத்தில் பொது மக்கள், சுற்றுலா பயணிகள் பயனடையும் வகையில் பூண்டு கண்காட்சி நடத்த இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ளது.