Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

கோவை வைசியாள் வீதி அருள்மிகு ஸ்ரீபொன்னு மாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா சக்தி கரகம் மற்றும் அம்மன் திருத்தேர் திருவீதி உலா ஸ்ரீ அய்யனார் ஆதீனம் தொடங்கி வைத்தார்

கோவை, ஏப்.27: கோவை வைசியாள் வீதியில் அருள்மிகு ஸ்ரீ பொன்னு மாரியம்மன் திருக் கோவில் அமைந்துள்ளது. வருடம் தோறும் இத் திருக்கோவிலில் சித்திரை திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் சக்தி கரகம் மற்றும் அம்மன் திருத்தேர் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.

இத் திருவிழாவில் ஸ்ரீ அய்யனார் ஆதீனம் குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஸ்ரீ ஶ்ரீனிவாச சுவாமிகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் சக்தி கரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சக்தி கரக ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். சக்தி கரகம் முக்கிய வீதிகள் வழியாக ஊர் வலமாக சென்றது. பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. ஊர்வலத்தை ஸ்ரீ அய்யனார் ஆதீனம் குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஶ்ரீ ஸ்ரீனிவாசசுவாமிகள் தொடங்கி வைத்தார்.

மேள தாளங்கள் முழங்க, அம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று திருத்தேர் மற்றும் கரகம் கோவிலை வந்தடைந்ததும் சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இந்தத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து ஶ்ரீ பொன்னு மாரியம்மனின் திருவருளையும் ஸ்ரீ அய்யனார் ஆதீனம் அவர்களின் குருவருளை யும் பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீ அய்யனார் ஆதீனம் அவர் களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மரியாதை மற்றும் வரவேற்பு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறிவழகன் , ராஜா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.