Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

ஶ்ரீ அய்யனார் ஆதீனம் தலைமையில் ஶ்ரீ பொன்னூற்று பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை, சுமங்கலி பூஜை

108 சுமங்கலிகளுக்கு சேலை மற்றும் மங்கள பொருட்கள் வழங்கினார்.


கோவை, ஏப்.27: கோவை நாடார் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பொன்னூற்று பத்ரகாளியம்மன் ஸ்ரீ கருப்பண்ணசாமி திருக் கோவிலில் 46 ஆம் ஆண்டு சித்திரை குண்டம் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஶ்ரீ அய்யனார் ஆதீனம் குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஶ்ரீ ஹரிஹரஸ்ரீ ஶ்ரீனிவாசசு வாமிகள் தலைமையில் சனிக் கிழமை (25.04.26) அன்று மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் சுமங்கலிகள் கலந்து கொண்டு திரு விளக்கை ஏற்றி, மாங்கல்ய பலம்,குடும்ப வளம், ஆரோக் கியம் மற்றும் நல்வாழ்வு வேண்டி அம்மனை பூஜை செய்தனர்.

இதனை தொடர்ந்து ஸ்ரீ அய்யனார் சுவாமி திருக் கோவில், ஸ்ரீ அய்யனார் ஆதீனம் திருமடம் சார்பில் சுமங்கலி பூஜை ஶ்ரீ அய்யனார் ஆதீனம் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் ஶ்ரீ அய்யனார் ஆதீனம் குரு மகாசந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ ஹரிஹரஶ்ரீ ஸ்ரீனி வாசசுவாமிகள் திருக்கரங் களால் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட 108 சுமங்கலிகளுக்கு சேலை மற்றும் மங்களப் பொருட்கள் வழங்கி மாங்கல்ய பலம் மற்றும் சகல செல்வங்களும் சௌபாக்கியங்களும் பெருகிட வாழ்த்தி அருளாசி வழங்கினார்.

அம்மனுக்கு சிறப்பு அபி ஷேகம், மஹா அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. அன்னையின் அருள் பொழியும் புண்ணிய நாளில், திருமாங்கல்யத்தின் மகிமையை போற்றும் விதமாக சுமங்கலி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுமங்கலிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீ பொன்னூற்று பத்ரகாளியம் மன் ஸ்ரீ கருப்பண்ணசாமி திருவருளையும் ஸ்ரீ அய்யனார் ஆதீனம் அவர்களின் குருவருளையும் பெற்று மகிழ்ச்சியுடன் மனநிறைவுடன் சென்றனர்.

விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீ அய்யனார் ஆதீனம் அவர் களுக்கு கோயில் நிர்வாகத் தினர் சார்பில் பொன்னாடை போர்த்தி சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் திரு ராஜிவ், திரு புனித் குமார் மற்றும் திரு சதீஷ்குமார் மிக சிறப் பாக செய்திருந்தனர்.