Saturday, 18 July 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

வங்கதேச பெண்களை திருமணம் செய்தால் மரண தண்டனை: சீனர்களுக்குத் தூதரகம் எச்சரிக்கை

டாக்கா: கடந்த 2020-ம் ஆண்டு சீன மக்​கள் தொகை கணக்கெடுப்பின்​ படி, பெண்​களை விட திருமண வயதில் உள்ள ஆண்​கள் சுமார் 1.75 கோடி அதி​க​மாக உள்​ளனர். இதனால், அவர்கள் வெளி​நாடு​களில் சட்​ட​விரோத தரகர்​கள் மூலம் பெண்களை மணம்​ முடிக்​கும் போக்கு அதி​கரித்து வரு​கிறது.

சீன உச்ச நீதி​மன்​றத்​தகவல்​படி, கடந்த 2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை மட்​டும், திருமண மோசடி மற்​றும் மனிதக் கடத்​தலில் ஈடு​பட்ட 1,546 பேர் சீனா​வில் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். பெரும்​பாலான வழக்​கு​களில், சீன ஆண்​கள் ஆயிரக்​கணக்​கான யுவான் பணத்​தைக் கொடுத்து திரு​மணம் செய்த வெளி​நாட்​டுப் பெண்கள் சில நாட்​களி​லேயே காணா​மல் போய்​விடு​வ​தாக​வும், சில இடங்​களில் வெளி​நாட்​டுப் பெண்​கள் கடத்​தப்​பட்டு சீன ஆண்களைத் திரு​மணம் செய்ய வற்​புறுத்​தப்​படு​வ​தாக​வும் புகார்கள் எழுந்​துள்​ளன.

இதன் காரண​மாக, வங்க தேசம் தவிர ஏற்​கெனவே வியட்​நாம், மியான்​மர், லாவோஸ், பாகிஸ்​தான் மற்​றும் நேபாளம் ஆகிய நாடு​களி​லும் உள்ள சீனத் தூதரகங்​கள் திருமண மோசடி குறித்து எச்​சரிக்​கைகளை விடுத்​துள்​ளன. இந்த நிலை​யில், சீனாவைச் சேர்ந்த ஆண்​கள் பலர் வங்​க தேசத்​திற்கு வந்​து, இடைத்​தரகர்​கள் மூலம் பெண்​களைப் பணம் கொடுத்து வாங்​கு​வ​தாக புகார்​கள் எழுந்​துள்​ளது.

இதைத் தொடர்ந்து வங்க தேசத்​தில் உள்ள சீன தூதரகம் கூறியுள்ள​தாவது: வங்​கதேச சட்​டத்​தின்​படி மனிதக் கடத்​தல் வழக்​கு​களில் மிகக் கடுமை​யான குற்​றங்​களுக்கு ஆயுள் தண்டனை அல்​லது மரண தண்​டனை வரை விதிக்​கப்பட வாய்ப்புள்​ளது. இக்​குற்​றத்​தில் ஈடு​படு​பவர்​களுக்​குக் குறைந்தபட்சம் 7 ஆண்​டு​கள் சிறைத்​தண்​டனை​யும், சுமார் ரூ.3.95 லட்​சம் அபராத​மும் விதிக்​கப்​படும்.

மேலும், திரு​மணக் கடத்​தல் குற்​றங்​களுக்​குத் தூண்​டு​தலாகவோ அல்​லது உடந்​தை​யாகவோ இருப்​பவர்​களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை, ரூ.15,600 அபராத​ம் விதிக்​கப்​படும். திருமணங்​கள் உண்​மை​யான அன்​புட​ன் அமைய வேண்​டும். பெண்​களைப் பணம் கொடுத்து வாங்​கு​வது பிற்​காலத்​தில் கடுமை​யான நிதி இழப்​புக்​கும், உயிருக்கே ஆபத்​தான சூழ்நிலைகளுக்​கும்​ வழி​வகுக்​கும்​. இவ்​வாறு சீன தூதரகம்​ கூறியுள்​ளது.