Saturday, 18 July 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க புதிய திட்டம்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தமிழகத்​தில் பெண்​களுக்கு அதிக வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வதற்​கான புதிய செயல் திட்​டத்தை தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்​து உள்ளது.

தமிழகத்​தில் பெண்​கள் நலன்​களை முன்​னிறுத்தி மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2,500, மாநிலம் முழு​வதும் இலவச பேருந்து பயணம் உட்பட பல்​வேறு தேர்​தல் வாக்​குறு​தி​களை தவெக வழங்​கி​யிருந்​தது. தற்​போது அவற்றை படிப்​படி​யாக நிறைவேற்ற தவெக அரசு தீவிரம் காட்​டிவரு​கிறது. அதன்​படி, பெண்​களுக்கு மாநில அளவில் அதி​களவி​லான வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் வித​மாக ‘மகளிருக்​கான தரமான வேலை​வாய்ப்​புத் திட்​டம்’ என்ற செயல்​திட்​டத்தை உரு​வாக்க தமிழக அரசு முடிவு செய்​துள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இதற்​கான செயல்​திட்​டத்தை தயாரிப்​ப​தற்கு ஆலோ​சனை நிறு​வனத்தை தேர்வு செய்ய தமிழக அரசு ஒப்​பந்​தம் கோரி​யுள்​ளது. சிறப்​புத்​திட்ட செய​லாக்க துறை​யின்​கீழ் செயல்​படும் தமிழ்​நாடு பெண்​கள் வேலை​வாய்ப்பு மற்​றும் பாது​காப்​புத் திட்​டம் சார்​பில் வெளி​யிடப்​பட்​டுள்ள இந்த ஒப்​பந்​தத்​தின்​படி, மாநிலம் முழு​வதும் பெண்​களின் வேலை​வாய்ப்பு நிலை, அவர்​கள் எதிர்​கொள்​ளும் சமூக, பொருளா​தார மற்​றும் பாது​காப்பு சார்ந்த சவால்​கள் குறித்து விரி​வான ஆய்வு மேற்​கொள்​ளப்பட உள்​ளது.

தேர்வு செய்​யப்​படும் ஆலோ​சனை நிறு​வனம், மாவட்​ட​வாரி​யான வேலை​வாய்ப்​பு​கள், எந்​தெந்த துறை​களில் பெண்​களுக்கு அதிக வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்க முடி​யும், பெண்​கள் வேலைக்கு செல்​வ​தில் நில​வும் சவால்​கள் மற்​றும் தீர்​வு​கள், குழந்தை பராமரிப்​பில் இருக்​கும் பெண்​கள் வேலைக்கு செல்​வ​தில் எதிர்​கொள்​ளும் பிரச்​சினை​கள் குறித்​தும் ஆராய்ந்து அடுத்த 6 வாரங்​களுக்​குள் செயல்​திட்ட அறிக்​கையை மாநில அரசிடம் சமர்ப்​பிக்க வேண்​டும்​ என அதில்​ குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.