Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயர் ‘காமராஜர் காலை உணவு திட்டம்’ என மாற்ற

சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் ஸ்டாலினால் கொண்டு வரப்பட்ட முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என தவெக அரசு மாற்றம் செய்துள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தற்போது 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தவெக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஏற்கெனவே 'நான் முதல்வர்', 'முதல்வர் பதிப்பகம்' உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றியமைத்த நிலையில், தற்போது காலை உணவுத் திட்டத்தின் பெயரும் மாற்றப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

தவெக அரசின் இந்த பெயர் மாற்ற முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “பெருந்தலைவர் காமராஜர் பெயரை காலை உணவுத் திட்டத்துக்குச் சூட்டிய தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். படிக்க வைக்கும் கல்விக்கு பாடுபட்ட பெருந்தலைவருக்குச் செய்யும் முறையான மரியாதை” என்று அவர் தெரிவித்துள்ளார்.