Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சமீபநாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை உயர்ந்து மாலை சற்றே குறைந்த தங்கம் விலை, இன்று (ஆக.12) காலை மீண்டும் உயர்ந்தது.

அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்க விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய விலை விவரம்

இந்தச் சூழலில் சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,13,600-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.54 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,491-க்கு விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,980-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று சந்தையில் மாற்றமின்றி விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது.