Friday, 16 October 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை | இடைத்தேர்தல் முடிவுகள்

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மை நிலவரப்படி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கிறது.

மதுராந்தகத்தில் 13,000+ வாக்குகள் வித்தியாசத்திலும், தாராபுரத்தில் 8,000+ வாக்குகள் வித்தியாசத்திலும் தவெக முன்னிலை வகிக்கிறது.

தாராபுரம் தொகுதியின் வாக்கு முன்னிலை நிலவரம் ஆரம்பத்திலிருந்தே சுவாரஸ்யமாகச் செல்கிறது. முதலில் தவெக முன்னிலை, பின்னர் அதிமுக முன்னிலை எனத் தொடங்கி, இடையில் அதிமுக முன்னிலை எனப் போக்குக் காட்டியது. பின்னர் மீண்டும் தவெக முன்னிலைக்கு வர, அதிமுகவுடன் போட்டா போட்டி போக்கு உருவானது. இந்நிலையில், தற்போது திமுக இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மதுராந்தகம் முன்னிலை நிலவரம்:

தவெக - மரகதம் குமரவேல்: 38,080

திமுக - பரந்தாமன்: 25,480

அதிமுக - கனிதா சம்பத்: 21,620

சிபிஎம் - பி.சுகந்தி: 1051

நாதக - ஜானகிராமன்: 885

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகி ராமன் (நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மதுராந்தகத்தில் 86.26%, வாக்குகள் பதிவாகின. 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தாராபுரம் முன்னிலை நிலவரம்:

தவெக - சத்யபாமா: 48,675

திமுக - சுகன்யா: 39,039

அதிமுக - பானுமதி: 31,067

இந்திய கம்யூனிஸ்ட் - ப.லட்சுமணன் - 793

நாதக - கார்த்திகா - 3668

தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தாராபுரத்தில் 80.25% வாக்குகள் பதிவாகின. அங்குள்ள 320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன.

தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் வெற்றி:

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். காங்கிரஸ் தவிர்த்து இதர வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. மொத்தம் 112 தபால் வாக்குகள் பதிவானது. இதில் 65 வாக்குகள் பெற்று என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் முன்னிலை பெற்றார். 31 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குககள் 4 சுற்றுகளாக எண்ணப்பட்டன.


இறுதியில் பெற்ற வாக்குகள்:

அசோக் ஆனந்த் (என்.ஆர். காங்) - 13,358

விநாயகம் (காங்கிரஸ்) - 4,876

சேதுசெல்வம் (திமுக) - 2,664

சலீம் (இந்திய கம்யூ.) - 310

கார்த்திக் குமாரி (நாதக) - 172

என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்தத் தேர்தலில் காங்கிரஸை தவிர்த்து இதர வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.