Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் பிஎம்டபிள்யூ, யமஹா உள்ளிட்ட மோட்டார் வாகன நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.


தமிழகத்தில் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட முதல்வர், அவர்களது தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதியளித்தார். தமிழக முதல்வராக விஜய் கடந்த 10-ம் தேதி பதவியேற்றதை தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி, காவல், வருவாய், தொழில், வேளாண்மை உட்பட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், மோட்டார் வாகன நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களுடன் அவர் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதில், தமிழகம் மற்​றும் உலக அளவில் உள்ள பிரபல​மான நிறு​வனங்​களின் முதன்மை அலு​வலர்​கள் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். தமிழகத்​தில் தற்​போதைய தொழில் நிறு​வனங்​களின் பங்​களிப்​பு​கள், அவற்றை பலப்​படுத்​து​வதற்​கான செயல்​பாடு​கள், மின்​வாகன உற்​பத்​தி​யின் நிலை, மாநில ஏற்​றுமதி உள்​ளிட்ட பல்​வேறு அம்​சங்​கள் குறித்து இக்​கூட்​டத்​தில் ஆலோ​சிக்​கப்​பட்​டது.

அப்​போது, தொழில் வளர்ச்​சி​யில் மோட்​டார் நிறு​வனங்​களின் பங்​களிப்பை வெகு​வாக பாராட்​டிய முதல்​வர் விஜய், அவர்​களது தொழில் விரி​வாக்​கத் திட்​டங்​களுக்கு அரசு முழு ஒத்​துழைப்பு வழங்​கும் என்​றும் உறு​தி​யளித்​தார். தமிழகத்​தில் புதிய முதலீடு செய்​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள், தொழில் நிறு​வனங்​களின் தேவை​கள், எதிர்​பார்ப்​பு​கள் குறித்​தும் தொழில் நிறுவன உயர் அலு​வலர்​களு​டன் கலந்​துரை​யாடி​னார்.

குறிப்​பாக, பிஎம்​டபிள்யூ நிறு​வனத்​தின் மேலாண் இயக்​குநர் தாமஸ் டோஸ், யமஹா மோட்​டார் இந்​தியா குழு​மத்​தின் தலை​வர் ஜிம் ஆட்டா ஆகியோர் முதல்​வர் விஜய்யை தனித்​தனியே சந்​தித்து கலந்​துரை​யாடினர். தமிழகத்​தில் தொடர்ந்து முதலீடு​களை மேற்​கொள்​ளு​மாறு அவர்​களை முதல்​வர் கேட்​டுக் கொண்​டார். இந்த சந்​திப்பு வாயி​லாக, ஆட்​டோமொபைல் தொடர்​பான பல்​வேறு புதிய முதலீடு​கள் தமிழகத்​துக்கு கிடைக்க வாய்ப்பு உள்​ள​தாக கூறப்​படு​கிறது.


முதல்​வர் விஜய்​யை, இந்​திய தொழில் கூட்​டமைப்​பின் (சிஐஐ) தென் மண்​டலத் தலை​வர் பி.ர​விந்​திரன், தமிழக தலை​வர் சி.தேவ​ராஜன், துணைத் தலை​வர் ஜெ.​முரு​கவேல், முன்​னாள் தலை​வர் எம்​.பொன்​னு​சாமி உள்​ளிட்ட நிர்​வாகி​கள் நேற்று சந்​தித்​தனர்.

அப்​போது, தொழில் துறை வளர்ச்​சி, முதலீட்டு ஊக்​கு​விப்​பு, கொள்கை ரீதி​யான பங்​களிப்பு ஆகிய​வற்​றில் தமிழக அரசுடன் சிஐஐ நீண்ட காலம் கொண்​டுள்ள கூட்​டாண்மை குறித்​தும், தொழில் தொடங்​கு​வதை எளி​தாக்​கு​வதற்​கான நடவடிக்​கைகள், மாநிலத்​தின் நிலை​யான பொருளா​தா​ரம், தொழில் வளர்ச்​சிக்​கான முன்​னெடுப்​பு​கள் குறித்​தும் விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டது. சிஐஐ நிர்​வாகி​களின் கோரிக்​கைகளை கேட்​டுக் கொண்ட முதல்​வர், அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்​ப​தாக உறுதி அளித்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.


வேளாண் துறை ஆய்​வுக் கூட்​டம்: மேட்​டூர் உள்​ளிட்ட முக்​கிய அணை​களின் நீர் இருப்​பு, குறுவை நெல் சாகுபடி குறித்து வேளாண்​மை, நீர்​வளத் துறை​யின் ஆய்​வுக் கூட்​ட​மும் முதல்​வர் விஜய் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார், வேளாண்மை துறை செயலர் வ.தட்​சிணா​மூர்த்​தி, நீர்​வளத் துறை செயலர் ஜெ.ஜெய​காந்​தன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். டெல்டா மாவட்​டங்​களில் சாகுபடிக்​காக மேட்​டூர் அணை​யில் இருந்து தண்​ணீர் திறப்​பது, சாகுபடியை அதி​கரிப்​ப​தற்​கான நடவடிக்​கைகள், வேளாண் பட்​ஜெட் உள்​ளிட்​ட​வை தொடர்​பாக இக்​கூட்​டத்​தில்​ ஆலோ​சனை நடத்​தப்​பட்​டுள்​ளது.