Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் இன்று (ஏப்.20) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,300-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.1,14,400-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.280-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.2,80,000-க்கும் விற்பனையாகிறது.

முன்னதாக, இந்த ஆண்​டுக்​கான அட்சய திருதியை நேற்று கொண்​டாடப்​பட்​டது. அட்சய திரு​தியை நாளில் தங்​கம் மற்​றும் வெள்ளி நகைகள் வாங்​கு​வது பொது​மக்​களின் வழக்​க​மாக உள்ளது.

இதையொட்​டி, தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் பொது​மக்​கள் குவிந்​தனர். இன்றும் அது தொடர்வதால் இண்றைக்கும் மக்கள் தங்கம், வெள்ளி வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.