Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

பயிர்க் கடன் முழு தள்ளுபடிக்கு பரிசீலனை: அமைச்சர் மரிய வில்சன் தகவல்

நாகை: “தவெக ஆட்சியில் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு ரூ.2,500 வாக்குறுதி குறித்து திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தெரிய வரும்” தமிழக என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய பரிசீலனை செய்யப்படுகிறது. விவசாயக் கடன் தள்ளுபடியை பொறுத்தவரை, 2021-ஆம் ஆண்டின் இறுதியில் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்தாண்டுகளில் அதை படிப்படியாக தவணை முறையில் நிறைவேற்றியது.

தவெக ஆட்சியில் ஆர்பிஐ அறிவுறுத்தலின்படி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பின்னர், தவெக அளித்த பெண்களுக்கு ரூ.2,500 வாக்குறுதியை நிறைவேற்ற வாய்ப்பிருக்கிறதா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், “திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் (Revised budget) இது குறித்து தெரிய வரும்” என சிரித்தபடி தெரிவித்தார்.