Saturday, 18 July 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

சிவகாசி அருகே சஸ்பெண்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் சட்டவிரோத பட்டாசு உற்பத்தி - உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி M.புதுப்பட்டி அருகே நெடுங்குளம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலை விதி மீறல் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி நடைபெறுவதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்தப் பட்டாசு ஆலையில் அந்த பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரி சோதனை நடத்தினார். அப்போது அந்த ஆலையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஆலையின் உரிமையாளர் சுந்தர், குருநாதன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து காண்டிராக்டர் விவேக்கை எம். புதுப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.