துடியலூர் : போதை மருந்து பயன்படுத்தியதாக எழுந்து குற்றச்சாட்டில் அமைச்சர் சரத்குமாரை பதவிநீக்கம் செய்யக்கோரி துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ.காலனி 4, ரோட்டில் கோவை வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ஆ.ரவி, துணை செயலாளர் அசோக் பாபு ஆறுக்குட்டி ஆகியோர் தலைமைவகித்தனர்.மாணவரணி அமைப்பாளர் அந்தோனி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய அமைச்சர் சரத்குமாரை பதவிநீக்கம் செய்யக்கோரி வலியுறுத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் துணை மேயர் வெற்றிச் செல்வன், நகர செயலாளர்கள் கூடலூர் அறிவரசு, காரமடை, குருபிரசாத், முனுசாமி, அஷ்ரப் அலி,நாகநந்தினி,டி.பி.சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், சுரேந்திரன், இடிகரை ஜனார்த்தனன், மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேல், கற்பகம், மாலதி, சம்பத்,, மற்றும் தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டுடணர்.
ஆர்ப்பாட்டத்தில் 400 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.